என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் ஆர்ப்பாட்டம்"
- பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.
- புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
கன்னியாகுமரி :
குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் 423 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் கோட்டார் மறை மாவட்டத்தால் உரு வாக்கப்பட்ட அன்பியங்கள் இல்லை என்ற காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் தினசரி திருப்பலி, நினைவு திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம், முதல் திருவிருந்து, மந்திரிப்புகள், தவக்காலத்தில் குருக்களால் நடத்தப்படும் சிலு வைப் பாதை ஆகியவை கள் தடை செய்யப் பட்டது.
இந்த தடைகளை நீக்கி ஆலய வழிபாடுகளை தொடர்ந்து நடத்திட வலியுறுத்தி குளச்சல் பங்கு மக்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.
இதனால் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் வழக்கம்போல் ஆலய வழி பாடு நடத்துவது என சுமூக முடிவு ஏற்பட்டது. இதை யடுத்து கடந்த மாதம் நடை பெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட 2 இணை பங்குத்தந்தையர்கள் குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம் வந்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.
ஆனால் ஆலய நிர்வாகிகள் வழிபாடு நடத்த வரும் இணை பங்குத் தந்தையர்கள் குளச்சல் ஆல யத்தில் தங்கியிருக்க வேண்டும் எனவும், வேறு பங்குத்தந்தையை நியமிக்க வேண்டும் எனவும், தடைப் பட்டுள்ள நினைவு திருப்பலியை நடத்த வே ண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை கோட்டார் மறைமாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் குளச்சல் ஆலய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதை யடுத்து நேற்று மாலை ஆலயம் முன்பு பங்கு நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் குளச்சல் ஆலய நிர்வாகம், குளச்சலில் செயல்படும் சபைகள், சங்கங்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்குகளின் கூட்டமைப்பு குழுவினர் உள்பட திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மீனவர்கள் அன்பியங்கள் வேண்டாம், புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து ஆலய நிர்வாகிகள் கூறுகையில், குளச்சல் பங்கு மக்களின் உணர்வு களை உணர்ந்து கோட் டார் மறை மாவட்ட நிர்வாகம் உடனே புதிய பங்குத் தந்தையை நியமிக்க வேண்டும். இதில் கா லதாமதம் ஏற்பட்டால் கோட்டார் மறை மாவட்ட கடற்கரை பங்கு களின் கூட்டமைப்பு குழு மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றனர்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு வம்பாகீரப்பாளையத்தில் உள்ள முகத்துவாரம் வழியாக மீனவர்கள் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.
துறைமுக முகத்துவாரம் அடிக்கடி மணல் சேர்ந்து அடைத்து கொள்ளும். இதனால் மீனவர்களின் படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தரை தட்டி சேதமடையும். சமீபத்திலும் முகத்துவாரம் முழுமையாக மணல் சேர்ந்து அடைத்து கொண்டது.
இதனால் விசைப்படகு, கன்னா படகு, எப்.ஆர்.பி. படகு உள்ளிட்ட படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த 10-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. முகத்துவாரத்தை தூர்வாரி கடல்புறத்தின் இருபுறமும் கற்களை கொட்ட வேண்டும். 10 மீட்டர் ஆழப்படுத்த வேண்டும். நிரந்தரமான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்படி இன்று தலைமை தபால்நிலையம் முன்பு 18 கிராம மீனவர்களும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் வடிவேலு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
இதில் படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், மீன் ஏற்றும் வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன் விற்கும் பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்